போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 4-ந்தேதி தொடங்குகிறது

5817பார்த்தது
போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 4-ந்தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 84 காலியிடங்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 179 காலியிடங்களுக்கான தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வருகிற 4-ந்தேதி தொடங்க உள்ளது. போட்டித்தேர் வுக்கு இலவச பயிற்சியில் கலந்து கொண்டு படிப்பதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0421 2999152, 86820 66089 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். இந்த பயிற்சி வகுப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக் டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி