நம்மாழ்வார் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

77பார்த்தது
நம்மாழ்வார் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வார் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

உயிர்ம வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயி களை ஊக்குவிக்கும் வகையில் அங்கக உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் பதிவுக்கட்டணம்
ரூ. 100-ஐ செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பளவில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். முழுநேர உயிர்ம விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிர்ம வேளாண்மைக்கான சான்று பெற்றிருக்க வேண்டும். மாவட்ட அள விலான மதிப்பீட்டு குழு மற்றும் மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.
வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தமிழக அர சால் நம்மாழ்வார் பெயரில் முதல்பரிசாக ரூ. 2½ லட்சம், ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பதக் கம், 2-வது பரிசாக ரூ. 1½ லட்சம், ரூ. 7 ஆயி ரம் மதிப்புள்ள பதக்கம், 3-வது பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பதக் கம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்து ராஜ் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி