பல்லடத்தில் பயணிகள் நிழல் குடை அமைக்க பொதுமக்கள் சாலை மறியல்

76பார்த்தது
பல்லடம் அருகே தாராபுரம் நெடுஞ்சாலையில் பயணிகள் நிழல் குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் அவ்வழியே சென்று வருகின்றன. பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான அண்ணாமலையார் நகர் பகுதியில் நூற்றுக்கும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் முன்னரே பேருந்து நிறுத்தம் இருந்தது. மேலும் அப்பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ள காரணத்தால் அங்கு நாள்தோறும் பள்ளிக் குழந்தைகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இதனிடையே பொதுமக்கள் அண்ணாமலையார் நகர் பகுதியில் பயணிகள் நிழல் குடை அமைக்க மாவட்ட ஆட்சியர், நகராட்சி தலைவர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என அனைவரிடமும் மனுக்களை கொடுத்து முறைப்படி அனுமதி பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் பயணிகள் நிழல் குடை அமைக்க பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் முன்வந்த போது அப்பகுதியை சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

தொடர்புடைய செய்தி