சஹாரா பாலைவனத்தில் பெய்த கனமழையால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா ஆப்பிரிக்க கண்டத்தில் 11 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில் மொராக்கோ நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள சஹாரா பாலைவனத்தில் 24 மணிநேரத்தில் 100 மி.மீ. மழை பெய்ததால், அங்குள்ள இரிக்கி ஏரி நிரம்பியது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை 2 நாட்களில் கொட்டித் தீர்த்ததே வெள்ளத்திற்கு காரணம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.