பிகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கியா கட் கிராமத்தில் மிகவும் தனித்துவமான மற்றும் ஆச்சர்யப்பட வைக்கும் பாம்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் சிறப்பு, ஒவ்வொரு பக்தரும் தங்களின் கைகளில், கழுத்தில் என உடலில் முழுவதும் பாம்புகளை வைத்திருப்பதை பார்க்க முடியும். இந்த திருவிழா அம்மக்களின பாம்புகள் சார்ந்த நம்பிக்கை மற்றும் வழிபாடு சார்ந்ததாகும். பூசாரி ஒருவர் பாம்புகளை எடுத்து வீசுவார். பொதுமக்கள் அதை கையில் எடுத்துக்கொள்வார்கள்.