ஏ.சி.யில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை நாம் பார்த்திருப்போம். வீணாக செல்லும் அந்த தண்ணீரை பல வகைகளில் நம்மால் பயன்படுத்த முடியும் என்பதை அறிவீர்களா? ஏ.சி. தண்ணீரை வீட்டில் உள்ள செடிகளுக்கு ஊற்றலாம். அதைக் கொண்டு சமையலைறையில் பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவலாம். ஏனெனில் ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீர் அசுத்தமற்றதாகவே இருக்கிறது. அப்படியானால் அதை குடிக்கலாமா என்றால் நிச்சயம் குடிக்கக் கூடாது.