தலைமை டிராபிக் வார்டன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

551பார்த்தது
தலைமை டிராபிக் வார்டன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாநகரில் டிராபிக் வார்டன் அமைப்பில் காலியாக உள்ள தலைமை டிராபிக் வார்டன் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாநகரில் வசிப்பவர், சுயதொ ழில் செய்பவராகவோ, வேலை செய்பவராகவோ இருக்க வேண்டும். 25 வயது முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக இருக்க வேண்டும். எந்த அரசியல் சார்பும் இல் லாதவராகவும், எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவராகவும் இருக்க கூடாது. உடல் தகுதியுடையவராக இருக்க வேண்டும். டிராபிக் வார்டன் அமைப்பின் மூலம் அரசுக்கு தன்னார்வலரா கவும் மற்றும் சம்பளம் இல்லாத சேவையை வழங்க தயாராக இருக்க வேண்டும். தனது சொந்த செலவில் சீருடைகள், உப கரணங்கள் மற்றும் பேட்ஜ்களை வாங்கும் நிலையில் இருக்க வேண்டும். கோர்ட்டால் தண்டிக்கப்படாதவராக இருக்க வேண் டும். துணை ராணுவப்பிரிவு அல்லது அத்தியாவசிய சேவைக ளின் அதிகாரியாகவோ அல்லது கவுரவ பதவியில் இருப்பவ ராக இருக்கக்கூடாது. தகுதியானவர்கள் விண்ணப்பங்களை தலைமை டிராபிக் வார்டன், தமிழ்நாடு டிராபிக் வார்டன் அமைப்பகம், திருப்பூர், காவல் உதவி ஆணையாளர் அலுவ லகம் (போக்குவரத்து), அங்கேரிப்பாளையம் ரோடு, இன்பன்ட் ஜீசஸ் பள்ளி எதிரில் திருப்பூர்-641603 என்ற முகவரியில் வரு கிற 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி