65 இருசக்கர வாகனங்கள் ஏலம்

1089பார்த்தது
65 இருசக்கர வாகனங்கள் ஏலம்
வடக்கு தாசில்தார் அலுவலகத்தில்
65 இருசக்கர வாகனங்கள் ஏலம்

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. அதன்படி 65 இரு சக்கர வாகனங்கள் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத் தில் வருகிற 5-ந் தேதி மதியம் 2 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் கார்டு, வைப்புத்தொகை ரூ. 5 ஆயிரத்தை வங்கி வரை வோலையாக வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நாளை மாலைக்குள் (வியாழக்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று ஏலத்தில் விடப்படும் வாக னங்களை பார்வையிடலாம். கூடுதல் விவரங்களுக்கு வடக்கு தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி