கத்தியால் குத்தி வழிப்பறிக்கு முயன்ற 5 ஆண்டு சிறை

55பார்த்தது
கத்தியால் குத்தி வழிப்பறிக்கு முயன்ற 5 ஆண்டு சிறை
கத்தியால் குத்தி வழிப்பறிக்கு முயன்ற
வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
மற்றொருவருக்கு 3ஆண்டு ஜெயில்

புதுக்கோட்டை சேர்ந்தவர் வருன் ராஜ்குமார் (வயது 24). இவ ருடைய நண்பர் அசோக் (24). இருவரும் கடந்த மாதம் 11-ந் தேதி இரவு திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நின்ற போது, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விஜய் (23), கவிபாலன் (24) சேர்ந்து கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடு பட முயன்றனர். இது தொடர்பாக தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய், கவிபாலன் இரண்டு பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜே. எம். 2 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
விஜய்க்கு 5 ஆண்டுகள் 9 மாதம் சிறை தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம், கவி பாலனுக்கு 3 ஆண்டுகள் 9 மாதம் சிறை தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக் கப்பட்டது. குற்ற சம்பவம் நடந்து 24 நாட்களில் கோர்ட்டில் தீர்வு பெற்று கொடுத்த தெற்கு போலீசாரை மாநகர போலீ சாரை கமிஷனர்லட்சுமி பாராட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி