15 கிலோ கஞ்சா பறிமுதல்; வட மாநில இளைஞர்கள் கைது

55பார்த்தது
திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் சாமுண்டிபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் உதவி ஆணையர். அணில் குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப் போது வீடு ஒன்றில் 15 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சகோர் மகானந்தா (26), பிங்கு பிபார் (20), சிபா மகானந்தா (32), சுப்ராட் பெரோ (21), நித்ய நந்தா போரிடா (26) என்ற 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி