குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் ஆகியோர் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் பல்லடம், சின்னியகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் அரசு மானியத்துடன் தொழில் கடன் பெற்று செயல்பட்டு வரும் நிறுவனங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பல்லடம் வட்டம். சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 1. 83 கோடி மதிப்பில் அரசு மானியமாக ரூ. 50. 00 இலட்சம் மதிப்பீட்டில் துணி உற்பத்தி ஏர்ஜெட் தறி நிக்காஸ் வீவன் மில் நிறுவனத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதல்வரின் சிறிய முயற்சியில் 5 சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 2 ஆயிரத்து 993 கோடியில் வங்கிக்கடன் வழங்கி 3 ஆண்டுகளில் 33, 466 புதிய தொழில் முனைவோரை உருவாக்கி உள்ளது. அவர்களுக்கு ரூ. 1, 104 கொடியே 78 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.