உடுமலை: கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

50பார்த்தது
உடுமலை: கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் நேரில் ஆய்வு
உடுமலை அருகே மானுப்பட்டி பகுதியில் ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தீவனப் பயிர் சாகுபடியை சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து குறிச்சிக்கோட்டை கால்நடை மருந்தகத்தில் கிராமம் வாரியாக நடைபெறும் மாதிரி கணக்கெடுப்பு, ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம், அமராவதி நகர் சோதனை சாவடி உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து மண்டல அளவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுக்கும் திட்டப் பணிகள் மற்றும் கால்நடை கணக்கெடுப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.
உடுமலைக்கு வரும் முன்பு கூடுதல் இயக்குனர் பல்லடம் கால்நடை மருந்தகத்தில் தாது உப்புக்கள் விநியோகம் மற்றும் கோடைகால மேலாண்மை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து குடிமங்கலம் கால்நடை மருத்துவமனையில் மாதிரி கணக்கெடுப்பு 2024-25 ம் ஆண்டுக்கான கோடைகால பருவம் குறித்தும் விவரிக்கப்பட்டது. பின்னர் தாராபுரம் வட்டம் சேமலை கவுண்டன் புதூரில் 2023-24 நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் வே. ஜெயராமன் உள்ளிட்ட டாக்டர்கள், உதவி டாக்டர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி