காங்கேயத்தில் ஆயில் மில் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

577பார்த்தது
காங்கேயத்தில் ஆயில் மில் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஊராட்சிக்குட்பட்ட பரஞ்சேர்வழி பகுதியில் வசித்து வருபவர் ரவி வயது 48. இவரது மனைவி ஸ்ரீதேவி 38. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவர் சொந்தமாக ஆயில் மில் வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு‌ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏப்ரல் 1ஆம் தேதி இரவு சுமார் 10. 30 மணியளவில் வேலை உள்ளதாக மனைவியிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். பிறகு நள்ளிரவாகியும் வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் அவரது மனைவி எழுந்து பார்த்துள்ளார். அப்பொழுது கணவர் ரவியின் தொலைபேசி மட்டும் வீட்டில் இருந்துள்ளது. பின்னர் கணவரை தேடி பார்த்த பொழுது வீட்டின் அருகாமையில் உள்ள பூங்காவில் உள்ள கூடாரத்தின் மேற்கூறையில் உளள் ஆங்கிலில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கணவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த தற்கொலை குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி