சேலம்: லாரி டிரைவரை தாக்கி 1. 25 லட்சம் வழிப்பறி டிரைவருக்கு சிகிச்சை

51பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் 37. லாரி ஓட்டுநரான இவர் நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் பொள்ளாச்சி கோபாலபுரம் பகுதியில் இருந்து மாட்டுத்தீவனத்தை ஈரோடு பகுதியில் உள்ள சிவகிரி பகுதிக்கு பல்லடம் வழியாக டாரஸ் லாரியில் எடுத்து வந்துள்ளார்.

 அப்போது அவரது லாரியின் பின்னால் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று பல்லடம் அடுத்த வெங்கிட்டாபுரம் அருகே லாரியை வழிமறித்து ஓட்டுநர் சுரேஷை லாரியில் இருந்து கீழே இறக்கி அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாகவும், மேலும் சுரேஷ் லாரியில் கொண்டு வந்த 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவரிடமிருந்து பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து லாரி ஓட்டுநர் சுரேஷ் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற போலீசார் சுரேஷை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுரேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், லாரியை வழிமறித்து லாரி ஓட்டுநரை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி