மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்

81பார்த்தது
மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்
பல்லடம் முதல் வெள்ளகோவில் வரை 47 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் ரூ. 275 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி தேசிய நெடுஞ்சாலை 10 மீட்டரில் இருந்து 19. 2 மீட்டர் அகலப்படுத்த படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு முன்பு கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையாக இருந்த போது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வராமல் மூடப்பட்டது.  இதை தொடர்ந்து தற்போது நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் முன்பு இருந்த சுங்கச்சாவடி இடத்திலேயே மீண்டும் சுங்கச்சாவடி கட்டும் பணி நடந்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி