உடுமலை நகர மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் வாக்குவாதம்

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர் சௌந்தர்ராஜன் பேசும் பொழுது. உடுமலை நகராட்சிக்குட்பட்ட
வார்டுகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படு வதில்லை இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் குப்பைகள் அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர் எனவே அலட்சியம் காட்டும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மேலும் 25 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில்.
உடுமலை தளி ரோட்டில் மத்திய கூட்டுறவு வங்கி அர்பன் பேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் இவற்றை இடமாற்றம் செய்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி நிலையில் தற்பொழுது வரை எந்த
ஓரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே மீண்டும் தீர்மானம்
கொண்ட கொண்டு பட
வேண்டும் நகர மன்ற உறுப்பினர்கள் வழங்கும் கோரிக்கைகளை உடனே சரிசெய்ய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். இதற்கிடையில் நகராட்சி தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 75 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி