பல்லடம்: பஸ்சை முந்த முயன்ற கார் கவிழும் சிசிடிவி வீடியோ!

4420பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து கோவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை சொகுசு கார் ஒன்று முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது பேருந்தின் பக்கவாட்டில் கார் மோதி சாலையின் நடுவே தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

தொடர்ந்து அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பல்லடம் காவல்துறையினர் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி