திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில், அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் இரு கரைகளையும் தொட்டு, கரை புரண்டு ஓடுகிறது. வழக்கத்தை விட அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும், கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.