சோழமாதேவி அருகே தொடரும் விபத்து! நடவடிக்கை என்ன?

81பார்த்தது
சோழமாதேவி அருகே தொடரும் விபத்து! நடவடிக்கை என்ன?
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவு சாலையில், சோழமாதேவி மேடு பகுதியிலிருந்து, வடக்கே வேடபட்டி பிரிவு வரை உள்ள இடைப்பட்ட சாலையில் அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதனை எடுத்து இந்தச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை நெடுஞ்சாலைத்துறை செவிசாய்க்காமல் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனமும் கனரக வாகனமும் எதிரெதிரே எதிர்பாரதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வேடபட்டியைச் சேர்ந்தவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு இப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால் விரைவில் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி