திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கொழுமம் அருகே கோதை அம்மன் குளம் உள்ளது, 300 ஏக்கர் பரப்பளவிற்கு அதிகமாக இருந்த குளம் தற்போது 240 ஏக்கர் அளவில் உள்ளது. இதை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் குளத்தில் செடி கொடிகள் வளர்ந்து, குளத்தின் கரையை செதப்படுத்தி, பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் செடி கொடிகளால் தண்ணீரின் அளவும் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்தக் குளத்தை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.