அம்மை நோய் ஆரம்பம்! மருத்துவர்கள் எச்சரிக்கை

57பார்த்தது
அம்மை நோய் ஆரம்பம்! மருத்துவர்கள் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் அம்மை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடுமையான வெயில் காரணமாக உடம்பில் ஏற்படும் உஷ்ணத்தால் அம்மை நோய் உண்டாகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெரியவர்களிடமும் அம்மை நோய் தாக்கம் ஆரம்பமாகியுள்ளது. எனவே பொதுமக்கள் வெயிலில் அதிக நேரம் அலைய வேண்டாம், குளிர்ச்சியான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகளவு தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அம்மை நோய் ஆரம்பத்திலேயே உரிய மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புடனும், சுகாதாரத்துடனும், மருத்துவரின் அறிவுறுத்தல் படியும் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி