திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான கணியூர் காரத்தொழுவு துங்காவி மருள்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பலமுறை வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கோஷங்கள் இடப்பட்டன மேலும் திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி மாநில தொழிற்சங்க செயலாளர் குணசேகரன் மாநில குழு உறுப்பினர் அப்பாஸ் தொழிற்சங்க பொறுப்பாளர் பால் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.