மடத்துக்குளம்: பழைமையான மகாவீரர் சிலை கண்டுபிடிப்பு

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி ஆற்றின் கரையோரங்களில் நதிக்கரை நாகரிகம் இருந்தமைக்கான சான்றாக கல்வெட்டுகளும் தொழில் ஆவணங்களையும் தேடி ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் அருகில் மகாவீர் சிலை ஒன்று கிடைப்பதாக வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கு தகவல் கொடுத்தனர். சிலை கிபி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த இடத்தில் அயிரை என்னும் ஐவர்மலை சுமார் எட்டு கிலோமீட்டர் இடைவெளியில் உள்ளது. இங்கு சமணர்கள் வசித்து வந்ததற்கான கல்வெட்டு சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வரலாற்று ஆய்வு நடுவம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி