பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளராக மடத்துக்குளம் ஈஸ்வரசாமி

69பார்த்தது
பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளராக மடத்துக்குளம் ஈஸ்வரசாமி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் திமுக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளருமான கே ஈஸ்வரசாமி அவர்கள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுகவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மடத்துக்குளம் வட்டம் மைவாடி ஊராட்சி கருப்புச்சாமிபுதூரைச் சேர்ந்த கருப்புச்சாமி கவுண்டர் மகன் ஈஸ்வரசாமி(48).
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், லயன்ஸ் கிளப் முன்னால் தலைவர், நூற்பாலை, ரியல் எஸ்டேட், இரு சக்கர வாகன டீலர், கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா பள்ளி தாளாளர், மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு முகங்களை கொண்டவர்.
10 ம் வகுப்பு வரை படித்த இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திமுக வில் உறுப்பினர், மடத்துக்குளம் ஒன்றிய பிரதிநிதி, ஒன்றிய பொருளாளர், ஒன்றிய செயலாளர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு துணைத் தலைவர் என படிப்படியாக உயர்ந்தவர்.
இவரது மனைவி லதா பிரியா மாவட்டக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகள் ஹரிவர்ஷா (மருத்துவக் கல்லூரி மாணவி).

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி