கணியூர் கோவில் திருவிழா! திமுக வேட்பாளர் பங்கேற்பு

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு கணியூர் பேரூராட்சி மன்றத்தின் சார்பில் அஜய் ஆர்கெஸ்ட்ரா இசை குழுவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திமுக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர், இந்தியா கூட்டணி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமி கலந்து கொண்டார்.
கணியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பத்மநாதன், துணைத் தலைவர் ஜைனுல் ஆபிதீன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீதி, திமுக மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி