திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மக்காச்சோளம் , தானிய வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து உள்ளனர்.
இந்த நிலையில் வன எல்லை கிராமங்களான திருமூர்த்தி நகர் பொனன்னாலமமன் சோலை, வளைபாளையம் ராவணபுரம தேவனூர் புதூர் ஜல்லிபட்டி ஆகிய கிராமங்களில் கடந்த
சில தினங்களாகவே காட்டுப்பன்றிகள் இரவு மற்றும் பகல் நேரத்தில் புகுந்து மக்காச்சோளம் மற்றும் தென்னங்கன்றுகளை நாசம் செய்து வருகின்றது இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவு இழப்பீடு ஏற்படுகின்றது.
இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாலும் வனத்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதை கண்டித்து இன்று உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால பரபரப்பு ஏற்பட்டது
உடுமலையில் விளை நிலங்களுக்குள் காட்டுபன்றிகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பாதிக்கபட்ட தென்னங்கன்றுகளுடன் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது