அரசு பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

57பார்த்தது
அரசு பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி குமரலிங்கத்தில், 720 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி கற்றல் மேம்பாடு போன்ற பல்வேறு பயிற்சிகளின் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படித்து வரும் இளம் மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு தன் வாழ்வை அழித்துக்கொள்கின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் பள்ளியில் புகையிலை ஒழிப்பு கருத்தரங்கம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் குமரலிங்கம் சுகாதார ஆய்வாளர் முரளி மாவட்ட சுகதார ஆய்வாளர் மற்றும் கணியூர் சுகதார மேற்பார்வையாளர் தாமரைக்கண்ணன், தன்னார்வலர் பிரேம் ஆகியோர் புகையிலையின் தீமை குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். ஆசிரியைகள் வினிதா, சந்திரகாந்தி சுகன்யா ஆகியோர் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஆசிரியர் முத்துக் கருப்பன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி