வெள்ளகோவிலில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் சேலமலையப்பன். இவர் 2 நாட்களுக்கு முன் பள்ளியில் இருந்து குழந்தைகளை பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக பள்ளி வளாகத்தில் இருந்து பேருந்து ஒட்டிச்செல்லும் போது பாதி வழியில் திடீரென செமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் தனது வாகனத்தில் உள்ள 20 குழந்தைகளின் உயிரை கருத்தில் கொண்டு வாகனத்தை விபத்து ஏற்படாமல் சாமர்த்தியமாக சாலையின் ஓரமாக நிறுத்தினார். இதைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய சேமாலையப்பன் மறைவிற்கு இரங்கல் செய்தியை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று உயிரிழந்த தனியார் பள்ளி ஓட்டுநர் சேமலையப்பனுக்கு ரூ. 5 லட்ச ரூபாய் நிதி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் ஆகியோர் காங்கேயம் அருகே உள்ள சத்யா நகருக்கு இன்று நேரில் வந்து ரூ. 5 லட்சத்திற்க்கான காசோலையை சேமலையப்பன் பெற்றோரான சுப்பன், காவிரி மற்றும் மகன்கள் ஆகியோரிடம் காசோலையை ஒப்படைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.