காங்கேயம் துளிகள் அமைப்பின் சார்பில் காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது குளம் குட்டைகளை தூர் வருவது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் சிவன்மலை ஊராட்சி இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரக்கன்றுகளை நட்டு உள்ளனர். இதுவரை பல கட்டங்களாக 26 ஆயிரத்து 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 141 வது கட்டமாக காங்கேயம் ஸ்ரீ ஆதி தேவாத்தாள் கோவில், கருப்பண்ணசாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் பி. கே. பி நிறுவனங்கள் உரிமையாளர் பி. கே. பாலுசாமி, ஆடிட்டர் செல்வராஜ், காங்கேயம் டவுன் ரோட்டரி தலைவர் என். எஸ். என். தனபால், சிவன்மலை முருகன் ரைஸ் மில் அய்யாசாமி, செல்வநாயகி அம்மன் ஆயில் மில் அபிராமி மணி, ஆவின் பாலக பூபதி, சக்தி குரூப் சுப்பிரமணியம், எஸ். வி. ஆர். குரூப் குமார் @ நல்லசிவம், செந்தில்குமார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர், ஆதி குல பொதுமக்கள் மற்றும் காங்கேயம் துளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தனர்.