1 1/2 டன் முருங்கைக்காய் கொள்முதல்

52பார்த்தது
வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் ஆன மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், சின்னாத்திபாளையம், பெரியாத்திபாளையம், பாப்பம்பாளையம், மாந்தபுரம் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக் காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று வெள்ளகோவில் கொள்முதல் நிலையம் செயல்பட்டது, இந்த கொள்முதல் நிலையத்திற்கு 20 விவசாயிகள் முருங்கை காய்களை கொண்டு வந்தனர். இதனை வாங்குவதற்கு முத்தூர், வெள்ளகோவில், காங்கேயத்தைச் சேர்ந்த 4 வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் ஒரு கிலோ செடி முருங்கை ரூ. 80க்கும் மரம் முருங்கை ரூ. 70-க்கும் கொள்முதல் செய்தனர். இதேபோல் வெள்ளகோயில் அருகில் புதுப்பையில் தனியார் கொள்முதல் நிலையத்திற்கு 1 1/2 டன் முருங்கைக்காய் வறுத்து இருந்தது. மரம் முருங்கை ரூ. 40க்கும், செடி முருங்கை ரூ. 70க்கும் கரும்பு முருங்கை ரூ. 80க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. இங்கு கொள்முதல் செய்யப்படும் முருங்கைக்காய்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்கள் ஓட்டல்கள் மற்றும் மார்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக வியாபாரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி