பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்தினருக்கு பிரகாஷ் எம்பி ஆறுதல்

64பார்த்தது
பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்தினருக்கு பிரகாஷ் எம்பி ஆறுதல்
பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ஈரோடு பிரகாஷ் எம்பி ஆறுதல்


காங்கேயம் சத்யா நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் வெள்ளகோவில் அய்யனுர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து குழந்தைகளை வேனில் அழைத்து வந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். உயிர் பிரியும் தருவாயில் வேனில் இருந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற வேனை சாலையோரமாக நிறுத்தினார்.   இதை அடுத்துசேமலையப்பன்   குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்க உத்தரவிட்டார். அதன்படி ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.   இதை அடுத்து அமைச்சர்கள் மு. பெ. சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் டிரைவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் நேற்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பிரகாஷ் எம்பி அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காங்கேயம் நகரச் செயலாளர் வசந்தம் சேமலையப்பன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே. கே. ரவிச்சந்திரன், நகர மாணவரணி அமைப்பாளர் உமாபதி, வார்டு செயலாளர் ராஜா, 13வது வார்டு கவுன்சிலர் சிலம்பரசன்  மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி