நாய்க்கு நடைபயிற்சி இறுதியில் அடிஉதை வழக்கு பதிந்த காவல்துறை

1913பார்த்தது
நாய்க்கு நடைபயிற்சி இறுதியில் அடிஉதை வழக்கு பதிந்த காவல்துறை
வெள்ளகோவில் அருகே நாயுடன் நடை பயிற்சிக்கு சென்ற முதியவருக்கு அடி உதை

வெள்ளகோவில் இலக்கணநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் வயது 65. இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு 9 மணி அளவில் தன்னுடைய நாயை சங்கிலியால் பிடித்துக் கொண்டு கோவில்பாளையம் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் நாயே சாலையில் வாகனம் போக முடியாத அளவுக்கு இடையூறாக ஏன் கொண்டு செல்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது இதில் செல்வத்தை சந்தோஷ் தாக்கியதில் செல்வம் காயம் அடைந்து காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதை அடுத்துச் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது வெள்ளகோவில் உதவி ஆய்வாளர் அர்ச்சுனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி