காங்கேயம் நகராட்சி கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்

1566பார்த்தது
காங்கேயம் நகராட்சி அலுவலகத்திலுள்ள நகர்மன்ற கூடத்தில் நேற்று காங்கயம் நகராட்சி சாதாரண கூட்டம் காலை 10. 30 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ந. சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கமலவேணி,   நகராட்சி ஆணையர் கனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  


இக்கூட்டத்தில்

காங்கேயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் மேலும் 3 மாதங்கள் (ஏப்ரல் 1 முதல் ஜீன் 30 வரை) அவகாசம் நீட்டித்தும், ரூ. 52. 4 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 1, 3, 4, 18, 13 மற்றும் 15ல் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள், ரூ. 3 லட்சத்தில் மின்துண்டிப்பு காலத்தில் நகராட்சிக்கு தேவையான ஜெனரேட்டர் மற்றும் பொறியியல் பணிக்கான டீசல் செலவுகள், ரூ. 2. 1 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 11 மற்றும்  9ல் சின்டெக்ஸ் டேங்க் மாற்றியமைப்பு பணி உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து காங்கயம் நகர்மன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் காங்கயம் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி