ஒட்டப்பாளையம் கிராமம் இயல்பு நிலைக்கு திரும்பியது

66பார்த்தது
காங்கேயம் கணபதி பாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 14 நாட்களாக வீடுகளின் மீது இரவு நேரத்தில் மர்மமான முறையில் கற்கள் விழுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள கருப்புராயன் கோவில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் முழு கண்காணிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தினசரி இரவு காவலுக்காக 2 காவலர்கள் நியமித்துக் கண்காணிக்கப்பட்ட வந்த நிலையில் கடந்த சில நாட்களாக காங்கேயம் தாசில்தார் மயில்சாமி, காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் முதல் மர்மமான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. வீட்டின் மீது கற்கள் விழாததால் ஒட்டபாளையம் கிராமம் பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் நேற்று முதல் பொது மக்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து போலீஸ் மூலம் கண்காணிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துணைக் காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஊர் பொதுமக்களிடம் சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து ஒட்டபாளையம் கிராமத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

தொடர்புடைய செய்தி