புதர் மண்டி கிடக்கும் காங்கேயம் தாலுக்கா வளாகம்

75பார்த்தது
புதர் மண்டி கிடக்கும் காங்கேயம் தாலுக்கா வளாகம்
காங்கேயம் தாலுக்கா அலுவலக கட்டிடத்தை  சுற்றி முட்புதர்களும் கட்டிடத்தின் மீது மரங்கள் வளர்ந்தும் காட்சியளிக்கிறது. இதனால் கட்டிடங்கள்‌ மிகவும் பாழடைந்தும்,   சுவர்கள் சேதமடைந்தும் உள்ளது‌ என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் காங்கேயம் தாலுக்கா அலுவலகம் வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலகம், வேளாண்துறை அலுவலகம், தோட்டக்கலை துறை அலுவலகம், இ-சேவை மையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

டேக்ஸ் :