காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் காங்கேயம் கரூர் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு அனைத்து விதமான தற்காப்பு பயிற்சி குறித்து விழிப்புணர்வு முகாமை நடத்தினர். ஆறு, கிணறு, அருவி, மழை, வெள்ளம் மற்றும் தீ விபத்து போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது, பிறரை காப்பாற்றுவது குறித்து பயிற்சி விளக்கங்களை அளித்தனர். இந்த விழிப்புணர்வுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சி தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.