காங்கயம் கால்நடை மருத்துவர் இல்லாமல் விவசாயிகள் அவதி

50பார்த்தது
காங்கேயம் இனக் காளைகளுக்கு பெயர் பெற்றது‌ காங்கேயம். காங்கேயம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் சார்ந்து விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கால்நடை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கால்நடைகளை வளர்த்தல், சந்தைப்‌படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கேயத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ பராமரிப்புக்காக காங்கேயம் கால்நடை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ‌ பெரும்பாலான சூழ்நிலையில் ஆடுகள், மாடுகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் என அனைத்து உயிரினங்களுக்கும் மருத்துவ பராமரிப்பு அவசியமாக உள்ளது.
இந்த நிலையில் காங்கேயம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லாத காரணத்தினாலும், ஒரு முதுநிலை கால்நடை மேற்பாவையாளரும், இரண்டு கால்நடை உதவி பராமரிப்பாளர்களும் மட்டுமே உள்ளதால் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிரமமாகவும், மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலும் உள்ளது. மேலும் மருத்துவர்களே இல்லாமல் இயங்கி வரும் மருத்துவமனையில் கால்நடைகளுக்கு மருத்துவம் எவ்வாறு என விவசாயிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். எனவே மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவ காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கால்நடை விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி