காங்கேயத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், மற்றும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் புகையிலைப்பொருட்கள் ஆகியவற்றின் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். காங்கேயம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளையும், சட்ட ஒழுங்கு பாதுகாக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் காவல் துறையினரிடம் குறைகளும் கோரிக்கையிலும் கேட்கப்பட்டு விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி