காங்கேயத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி

69பார்த்தது
காங்கேயத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி

காங்கேயம் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக அனைத்து சாலைகளிலும் பறிக்கப்பட்டு குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அதன் காரணமாக காங்கேயம் முழுவதும் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தெருக்களில் குழிகள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றது. காங்கேயம் 4வது வார்டு முஸ்லிம் வீதியில் தற்போது குழிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. குறுகிய  சாலையில் குழாய்  அமைப்பிற்காக பறிக்கப்பட்ட குழிகளால் மக்கள் கடந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணி ஒரு வருட காலங்கள் நிறைவடைந்து மந்த நிலையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி