காங்கேயம் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் ஒன்றிய பொருளாளர் செல்லமுத்து தலைமையில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும், மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என வலியுறுத்தியும், மானியம் மற்றும் சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதை தடுத்து சந்தை விலையில் மின் கட்டணத்தை வழங்க வேண்டும் என மாநில அரசை ஒன்றிய அரசு நிர்பந்திக்க கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட பொருளாளர் வி. பி. பழனிச்சாமி காங்கேயம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் நிர்வாகிகள் செந்தில்குமார் ஜோதிமணி உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.