ராமபட்டினத்தில் பஞ்சு மில்லில் தீ விபத்து

67பார்த்தது
ராமபட்டினத்தில் பஞ்சு மில்லில் தீ விபத்து
ராமபட்டினத்தில் பஞ்சு மில்லில் தீ விபத்து பல லட்சம் மதிப்பில் ஆன பொருட்கள் எரிந்து சேதம்

காங்கேயம் அடுத்த சிவன்மலை ஊராட்சி இராமபட்டினம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் இயங்கி வருகிறது இந்த மில்லில் நேற்று எந்திரங்களில் ஏற்பட்ட வெப்பத்தால் தீ விபத்து ஏற்பட்டது அந்த தீ அங்குள்ள நூற்கண்டுகள் மூட்டைகள் எந்திரங்கள் ஆகியவற்றை பரவியது இது குறித்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி