தாராபுரம்: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - மக்கள் சாலை மறியல்

3664பார்த்தது
தாராபுரம் அடுத்த குண்டடம் புது நவகொம்பு என்ற இடத்தில் டாஸ்மாக் கடை எண்: 3456 இயங்கி வருகிறது. இங்கு இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு போதிய வருமானம் இல்லாததால் காரக்கட்டு தோட்டம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என டாஸ்மாக் மேலாளர் முடிவு எடுத்திருந்தார். இந்நிலையில் இடையங்கிணறு காரக்கட்டு தோட்டம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைய புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நிறைவடைந்தன. இந்த டாஸ்மாக் கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி