தாராபுரம் 107, டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என தகவல்!

534பார்த்தது
தாராபுரம் 107, டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என தகவல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 107. 6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்து 24, மணி நேரத்தில் 5, டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வரும் 21, ஆம் தேதி முதல் 27, ஆம் தேதி வரை அதிக வெப்பநிலை காணப்படும் மேலும் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான குண்டடம், மூலனூர், உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலை வீச கூடும் எனவும் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் நீர்ச்சத்து உள்ள பானங்களை அருந்த வேண்டும் எனவும் குறிப்பாக வெயிலின் போது அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி