மூலனூர்: அருகே 16. ஆடுகள் திருட்டு!

67பார்த்தது
மூலனூர்: அருகே 16. ஆடுகள் திருட்டு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பொம்மிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள். இவர் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை வழக்கம்போல் மாலையில் பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் காலையில் சென்று ஆட்டுப்பட்டியில் பார்த்தபோது 16 ஆடுகள் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து மூலனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று தொடர்ந்து கிராம பகுதிகளில் அடிக்கடி ஆடு திருட்டு போவதால் உடனடியாக திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :