அமைச்சர் கயல்விழி நடிகர் வாகை சந்திரசேகருடன் பிரச்சாரம்!

3609பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பேருந்து நிறுத்தம் முன்பு ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக நட்சத்திர பேச்சாளரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவரும்மான நடிகர் வாகை சந்திரசேகர், பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது அவர் பேசுகையில், “இந்த மக்களவை தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இதில் பாஜக வெற்றி பெற்று விட்டால், அடுத்து இந்தியாவில் தேர்தலே நடக்காது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்து டெல்லிக்கு அனுப்பினால் தான், மோடியை வீட்டுக்கு அனுப்ப முடியும்.

நான் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். அனைத்து வேஷங்களையும் போட்டுள்ளேன். உங்கள் முன் வரும்போது, திமுக தொண்டனாக, உங்களில் ஒருவனாக நின்று வாக்கு கேட்கின்றேன். ஆனால் பிரதமர் மோடி விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு, நாட்டு மக்களை மறந்து விட்டு, சினிமா நடிகர் போல் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். என தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் இ. ல. பத்மநாபன், குண்டடம் திமுக நகரச் செயலாளர் அன்பு, ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி