மடத்துக்குளம்: 80 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் துவக்கம்

73பார்த்தது
மடத்துக்குளம்: 80 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் துவக்கம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஒன்றியம் ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சியில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை இன்று (செப் -26) நடைபெற்றது. இதில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் மடத்துக்குளம் எம். எல். ஏ வுமான சி. மகேந்திரன் கலந்து கொண்டு சுமார் 80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

அத்துடன் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர். ஜி. ஜெகநாதன், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவல்லி ராஜசேகரன், மாவட்ட பாசறை செயலாளர் காமாட்சி சுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி