தாராபுரம் அருகே விவசாயிகள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்!

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், அருகே உள்ள பொன்னாபுரம் கிராமத்தில் கார்பன் ஆலை அமைப்பதற்கு, ஊராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தது. இதற்கு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


இச்சூழலில், ஆலைக்கு கொடுத்த அனுமதியை ஊராட்சி நிர்வாகம் ரத்து செய்ய வலியுறுத்தி, பொன்னாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகில் ஊர் பொதுமக்கள் 20 பேர் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலை சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்ட
அமைந்தால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொன்னாபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்பாத்துரை,
கே. ராமசாமி, பி. ஈஸ்வரன். வி. அரங்கநாதன், வி. சரவணகுமார். ஆர். துரைசாமி. எஸ். காளிமுத்து, எஸ். மதன். பி. பழனிச்சாமி. தீனதயாளன்,
வசநீதன், கருப்புசாமி, செந்தில்குமார், கார்த்தி, மதிவாணன், கோகுல் கண்ணன், உள்ளிட்ட 20, பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாக 200, க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் இருந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி