திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தை அடுத்த குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான வேங்கிபாளையம், சூரியநல்லூர், ஜோதியம்பட்டி, சிறுகிணறு, கொழுமங்குழி, இடையகிணறு, உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து செல்போன்கள், நகை, பணம் மற்றும் எலக்ட்ரிக் கேபிள்கள் தொடர்ந்து திருட்டுப் போய் உள்ளது. வேங்கிபாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் எலக்ட்ரிக் கேபிளை திருட முயற்சி செய்தபோது. ஒருவர் தப்பி ஓடினார் மற்றொருவர் வாலிபர்களை சுற்றி வளைத்த கிராம பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்துவிட்டு குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வேங்கிபாளையம் பகுதியில் திருட முயற்சி செய்த இரண்டு இளைஞர்களை கைது செய்வதாகவும் மேலும் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.