ஓவிய போட்டயில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!!

74பார்த்தது
சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு காவலதுறையின்சார்பில் பல்வேறுநிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது இந்நிலையில் கடந்த ஒரு வார காலகமாக அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது
ரயில் நிலையம் அருகில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர். பிரவீன் குமார் அபினவ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக போதை பொருள்களினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் மாணவ மாணவிகள் தத்ரூபமாக ஓவியங்களை வரைந்து காட்சி படுத்தி இருந்தனர். தொடர்ந்து ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபின் அபு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் போதை பொருட்களினால் ஏற்படும்
பக்க விளைவுகள் குறித்து சக மாணவியர்கள் இடையே கலந்துரையாடல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர காவல் துறையின் துணை ஆணையர்கள். ராஜராஜன், கிரீஸ் யாதவ். உதவி ஆணையர்கள். அணில் குமார், நந்தினி, நாகராஜ், கண்ணையன், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர். பிரபா தேவி, வடக்கு காவல் ஆய்வாளர். உதயகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி