பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது

56பார்த்தது
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது
தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் சாலையை சேர்ந்தவர் மகேஸ்வரன் வயது 37. இவர் அலங்கியம் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி மகேஸ்வரனிடமிருந்து ரூ. 150 பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். உடனடியாக மகேஸ்வரன் தாராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அலங்கியம் சாலையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த தாராபுரம் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணை உடுமலை நாசம்மாள் லேயவுட் பகுதியில் சேர்ந்த சபரீசன் 26, கோவையைச் சேர்ந்த கார்த்தி 24 என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் இணைந்து ஒரே இருசக்கரவணத்தில் பல்வேறு குற்றச்சம்பழங்கள் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதை அடுத்து தாராபுரம் காவல்துறையினர் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தி பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி